CPS S1 REGISTRATION
தமிழக அரசு ஊழியர்கள் புதிதாக பணியேற்ற உடன் அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனப்படும் CPS ( Contributory Pension Scheme ) இல் புதிய CPS ACCOUNT NUMBER ஐ உருவாக்க வேண்டும் .
அவ்வாறு உருவாக்கப்படும் CPS கணக்கு எண்ணில் ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஊதியத்தில் DUTY PAY + DA வில் 10 % ஊதிய பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செயப்படும் பணம் CPS கணக்கில் பற்று வைக்கப்பட்டு இறுதியாக ஓய்வு பெறும்போது ஓய்வூதிய பலனாக அரசு பங்களிப்புடன் சேர்த்து அப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
CPS NUMBER ஐ உருவாக்க கீழ் உள்ள இணையம் சென்று தங்கள் அலுவலகத்தின் பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன்பாக கீழ் உள்ள S1 படிவத்தை பதிவிறக்கம் செய்யவும் . அவ்விண்ணபத்தில் தவறுகள் ஏதும் இன்றி பூர்த்தி செய்து கொள்ளவும் . அதன் பின்பு அதனை பூர்த்தி செய்து 300 KB க்கு குறைவாக PDF வடிவில் மாற்றி கொள்ளவும் .
S1 படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தும் நீங்கள் ONLINE இல் விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் விவரங்களாக அமையும் .
படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
விண்ணப்பித்த பின்னர் ஓரிரு வாரங்களில் உங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அதன் பிறகு பதிவிறக்கம் செய்து புதிய CPS NUMBER ஐ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் .
CPS S1 படிவத்தில் கேட்கப்படும் முக்கிய விவரங்கள் சில
* பெயர் , பிறந்த நாள் , தந்தை பெயர் ,முகவரி
* கைபேசி எண்
* PASSPORT SIZE PHOTO
* PAN NUMBER
* ஆதார் எண்
* MAIL ID
* BANK BOOK DETAILS
* DATE OF JOIN
* DATE OF RETIREMENT
* OFFICE DETAILS
* PAY DETALS
* NOMINEE DETALS
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.