ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நுழைவு சீட்டினை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் இந்த கணினி வழி தேர்வு 03-02-2023 முதல் 14-02– 2023 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 க்கான தேர்வு நடைபெற்று அதன் தேர்வு முடிவு வெளியான நிலையில் தற்போது தாள் 2 க்கான தேர்வு தேதியினை வெளியிட்டு உள்ளது.
மேலும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் இந்த நுழைவு சீட்டில் தேர்வு நடைபெறும் மாவட்டம் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும் தேர்வு மையம் இருக்காது. தேர்வு மையத்தினை நீங்கள் அறிந்து கொள்ள தற்போது நீங்கள் பதிவிறக்கம் செய்யும் நுழைவு சீட்டில் உள்ள உங்கள் தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக மீண்டும் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதன் மூலம் தேர்வு மையத்தினை அறியலாம். (தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்யும் நுழைவு சீட்டினையே தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டும்)
நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய https://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் இணையம் சென்று பதிவிறக்கி கொள்ளலாம். அல்லது https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/LoginAction_input.action என்ற லிங்கினை தேர்வு செய்வதன் மூலம் நேரடியாக உங்களால் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலும்.
இந்த இணையத்தில் உங்கள் பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழைந்து . அதில் DASHBOARD ஐ தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கி கொள்ளலாம் .
உங்கள் தேர்வு தேதி என்ன? எப்போது நுழைவு சீட்டு தேர்வு மையத்துடன் பதிவிறக்கம் செய்யலாம்.என்பதை அறிந்துகொள்ள கீழ் உள்ள புகைப்படம் உதவும்.
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.