How to resize TNPSC PHOTO AND SIGNATURE

 TNPSC PHOTO AND SIGNATURE COMPRESSOR

                     ஒருமுறை பதிவின்போது, விண்ணப்பதாரர் மூன்று  மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தினை ஸ்கேன் செய்து 20KB - 50KB அளவில் ‘Photograph' என்றும் , கையொப்பத்தினை   10KB - 20KB அளவில் ‘Signature’ என்றும் 200 DPI என்ற அளவில் ஒளிச்செறிவு இருக்குமாறு சேமித்து பதிவேற்றம் செய்ய தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் .

       மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயம்  புகைப்படத்தின் கீழ் விண்ணப்பதாரரின்   பெயர்   மற்றும்    புகைப்படம்  எடுக்கப்பட்ட  நாள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் 

      அவ்வாறு  மாற்ற கிழ்காணும் இணைய இணைப்பை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் 2 நிமிடத்தில் மாற்றலாம் . தேர்வு செய்த உடன் அதன் முகப்பு உங்களுக்கு இவ்வாறு தோன்றும் 


இவற்றில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை மாற்றுவதற்கு தனித்தனியே இரண்டு OPTION கொடுக்கப்பட்டு இருக்கும் . அவற்றில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமோ அதனை தேர்வுசெய்து கொள்ளலாம் .



புகைப்படத்தினை மாற்ற வேண்டும் என்றால் மேல் உள்ளவாறு PHOTO என்ற OPTION ஐ தேர்வு செய்யவும் பின்பு உங்களது புகைப்படத்தை CHOOSE FILE மூலம் தேர்வு செய்யவும்  . இவற்றில் மூன்று RESIZE OPTION இருக்கும் .

1. AUTO COMPRESS + RESIZE

2. ADD INFO & AUTO COMPRESS + RESIZE

3. CROP + ADD INFO & AUTO COMPRESS + RESIZE

முதலில் உள்ளதை தேர்வு செய்தால் புகைப்படத்தை RESIZE மட்டுமே செய்யும். இரண்டாவது  உள்ளதை தேர்வு செய்தால் உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் எடுத்த நாளை பதிவிட சொல்லும், பதிவிட்டு GENERATE PHOTO கொடுத்தால் , அவை TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அளவில் பெயர் மற்றும் நாள் உடன் மாற்றி கொடுக்கும் . 

மூன்றாவது உள்ளதை தேர்வு செய்தால் உங்கள் போட்டோவை உங்களுக்கு ஏற்றார் போல்  CROP செய்து பெயர் மற்றும் நாள் உடன் மாற்றலாம் . 

கையொப்பத்தினை பொருத்தவரை நீங்கள் கையொப்பத்தை தேர்வு செய்தால் மட்டும் போதும் . TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அளவில் மாற்றி கொடுக்கும் . 

புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை  மாற்ற இங்கே சொடுக்கவும் 

https://www.tnpsc-photo-and-signature-compressor.otrhelp.in/



கருத்துரையிடுக

0 கருத்துகள்