HOW TO LINK EB NUMBER AND AADHAR /மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எவ்வாறு

 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைப்பது எவ்வாறு 

          தமிழக அரசு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே இனி மானியம் பெற இயலும் . நீங்கள் உங்கள் மொபைல் மூலமாகவே ஆதாரை 10 நிமிடத்தில் இணைத்து கொள்ளலாம் . 

 நீங்கள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். 

https://www.tangedco.gov.in/

https://adhar.tnebltd.org/Aadhaar/



வழிமுறை :

1. உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிடவும். 

2. கைபேசி எண்ணை பதிவிட்டு ENTER கொடுக்கவும். 

அடுத்து வரும் பக்கத்தில் 

3. நீங்கள் உரிமையாளர் , வாடகைக்கு உள்ளோரா என்று தேர்வு செய்யவும் .

4. ஆதாரில் உள்ளது போல் உங்கள் பெயரை பதிவிடவும் 

5. ஆதார் எண்ணை பதிவிடவும் 

6. தற்போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் OTP சரிபார்ப்பதன் மூலம் இணைக்கலாம் .

அதில் OWNER  என்ற OPTION ஐ உரிமையாளருக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .

 இணைக்க தேவைப்படும் இரண்டு முக்கிய விவரம் மற்றும் ஆவணம் 

1. மின் இணைப்பு எண்

2. ஆதார் விவரம் .

வாடகை வீட்டில் உள்ளவர்களும் இணைக்கலாம் . அதன் விவரம் உங்கள் வீட்டு உரிமையாளருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்