Online PSTM Certificate for Tamilnadu / How to apply Online PSTM

        Online PSTM Certificate for Tamilnadu

  தமிழ்நாட்டில் இதற்குமேல்  நடக்கவிருக்கும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும்  PSTM  (தமிழ்வழி கல்வி சான்றிதழ் ) இ - சேவை இணைதளத்தின் மூலம் ONLINE இல் விண்ணப்பித்து இனி ONLINE மூலம் பெற்று கொள்ளலாம். 

மேலும் E - சேவ மையம் செல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தபடியே  PSTM Online இல் விண்ணப்பிக்கவும் முடியும். அதற்கு நீங்கள் E - சேவை website இல் ஒரு புதிய பயனாளர் ID மற்றும் password ஐ create செய்ய வேண்டும். அதன் பின்னரே நீங்கள் விண்ணப்பிக்க இயலும் .

Online வழியாக நீங்கள் விண்ணப்பித்திருந்தாலும் நீங்கள் விண்ணப்பித்த ரசீதை பள்ளி எடுத்து சென்று பள்ளியில் மட்டுமே PSTM பெற முடியும்.  PSTM CERTIFICATE ஐ நீங்களே DOWNLOAD செய்ய இயலாது .  இவற்றில் விரைவில் மாற்றம் வரலாம். 

எவ்வாறு விண்ணபிப்பது என்று பார்ப்போம் :

E செவை இணையத்தில் உங்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழைக. 


அதில் SERVICES இல் உள்ள COMMISSIONERATE OF SCHOOL EDUCATION ஐ தேர்வு செய்யவும் . அதில் DSE 101 ISSUANCE OF PSTM CERTIFICATE FOR GOVT SCHOOL ஐ சொடுக்கவும்


தேர்வு செய்த உடன் உங்களுக்கு தமிழ்வழி கல்வி சான்றிதழ் விண்ணப்பிக்கும் பக்கம் வரும் அதில் Individual details , School details கேட்கப்பட்டு இருக்கும் .

Individual details இல் கேட்கப்படும்  விவரங்கள்:

1. உங்கள் பெயர் , தந்தை பெயர் , தாய் பெயர் ( மூன்றும் ஆங்கிலத்தில் )

2. உங்கள் பெயர் , தந்தை பெயர் , தாய் பெயர் ( மூன்றும் தமிழில்  )

3. பிறந்த தேதி , கைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி 


School detail இல் கேட்கப்படும்  விவரங்கள்:

1. எந்த வருடத்தில் இருந்து - எந்த வருடம் வரை ( உதாரணமாக 6 வகுப்பு - 10 வரை  விண்ணப்பித்தால் 6 ஆம் வகுப்பு சேர்ந்த வருடம் 10 வகுப்பு முடித்த வருடம் )

2. அதே போல் வகுப்பு - எந்த வகுப்பில்  இருந்து - எந்த வகுப்பு வரை

3. பள்ளி அமைந்து இருக்கும் மாவட்டம் 

4. பள்ளி அமைந்து இருக்கும் தாலுக்கா 

5.பள்ளி விவரம் ( அரசு பள்ளியா அல்லது அரசு உதவி பெறும் பள்ளியா )

6.பள்ளியின் பெயர் 

7.இறுதியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் 1 MB  குள் இருக்க வேண்டும்  (மாற்று சான்றிதழ்  மதிப்பெண் பட்டியல் ) 

 SUBMIT கொடுத்து ரூபாய் 60 செலுத்த வேண்டும் . செலுத்திய பிறகு APPLICATION PRINT எடுத்துக்கொள்ளவும் . ( கட்டாயம் : நீங்கள் எத்தனை  பள்ளியில் படித்தீர்களோ அத்தனை பள்ளியிலும் கட்டாயம் தமிழ்வழி கல்வி சான்றிதழ் பெறவேண்டும் .

முக்கிய குறிப்பு:

 நீங்கள் Online விண்ணப்பித்து application number மற்றும் Transaction number கொண்ட receipt பெற்றால் மட்டுமே. உங்கள் பெயர் நீங்கள் பயின்ற பள்ளியில் விண்ணப்பித்தது காண்பிக்கும். அதன் பின்னரே நீங்கள் பள்ளியில் PSTM Certificate பெற முடியும். E - SEVAI LINK https://www.tnesevai.tn.gov.in/


கருத்துரையிடுக

0 கருத்துகள்