இனி நடத்தை சான்றிதழ் வீட்டில் இருந்தபடியே
விண்ணப்பிக்கலாம்
தற்போது E சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே
நீங்கள் நடத்தை சான்றிதழ் விண்ணப்பித்து
பெறும்விதமாக தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது . ஏற்கனவே தமிழ்வழி
சான்றிதழ் ( PSTM ) ஆன்லைன் வழியாக E சேவை
மூலம் விண்ணப்பித்து பெற அரசு வழிவகை செய்ததை அடுத்து தற்போது அதே வழியில் நடத்தை
சான்றிதழ் விண்ணப்பித்து பெற அறிமுகம் செய்து உள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம் :
1 . இதற்கு முதலில் E சேவை இணையத்தில்
உங்களுக்குகென்று ஒரு பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும் .
அவ்வாறு இல்லையெனில் நீங்கள் E சேவை மையத்திற்கு சென்று மட்டுமே விண்ணப்பிக்க
இயலும் .
2. பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல் இருந்தால் நீங்கள் LOGIN செய்தவுடன் வரும் உங்கள் E சேவை முகப்பு பக்கத்தில் SERVICES ஐ தேர்வு செய்யவும் அதில் COMMISSIONRATE SCHOOL EDUCATION என்ற OPTION ஐ தேர்வு செய்யவும்.
3. ஏற்கனவே COMMISSIONRATE SCHOOL EDUCATION இல் PSTM OPTION மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது . அனால் தற்போது PSTM உடன்
சேர்த்து அதில் மேலும் ஐந்து OPTIONS கொடுக்கப்பட்டு உள்ளது . அதில் நடத்தை சான்றிதழும்
ஒன்று . மேலும் உங்கள் பள்ளியில் விளையாட்டு சான்றிதழ் உண்மை தன்மை அறியும் OPTION உம் உள்ளது .
4. தற்போது நடத்தை சான்றிதழ் விண்ணப்பிக்க அதில் DSE 119 CONDACT CERTIFICATE என்ற OPTION ஐ தேர்வு
செய்யவும்.
5. தேர்வு செய்தவுடன் உங்களின் INDIVIDUAL DETAILS மற்றும் SCHOOL DETAILS கேட்கப்படும்.
6 . INDIVIDUAL DETAILS ஐ பொறுத்தவரை விண்ணப்பதாரரின் பெயர் , விண்ணப்பதாரரின்
தந்தை பெயர் , விண்ணப்பதாரரின் தாய் பெயர் ( இவை மூன்றும் தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் ), பிறந்த நாள் , கைபேசி எண் , மற்றும் EMIS NUMBER ( கட்டாயம் இல்லை )
கேட்கப்பட்டு இருக்கும் .
7. SCHOOL DETAILS ஐ பொறுத்தவரை விண்ணப்பதாரர் எந்த வருடத்தில் இருந்து எந்த
வருடம் வரை படித்தார் , எந்த வகுப்பில் இருந்து எந்த வகுப்புவரை படித்தார் என்ற
விவரமும் மேலும் பள்ளி அமைந்துள்ள மாவட்டம் , தாலுக்கா , பள்ளியின் வகை ( அரசு ,
அரசு உதவி பெறும் பள்ளி ) , பள்ளியின் பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டு
இருக்கும் . இவை அனைத்தையும் முழுமையாக நிறைவு செய்த உடன் இறுதியாக உங்கள் மாற்று
சான்றிதழை 1 MB க்கு குறைவாக PDF ,JPG , PNG வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
இவ்வாறு உங்கள் நடத்தை சான்றிதழை நீங்கள் பெறலாம் .
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.