HOW TO DOWNLOAD PAY SLIP FOR IFHRMS/ மாத ஊதிய பட்டியல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

 வணக்கம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் ஊதிய பட்டியலை மாதம் மாதம் கருவூலம் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . மேலும் ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன்  உங்களின் ஊதிய பட்டியல் தயாரானதும் , உங்களின் கைபேசி எண் மற்றும் MAIL ID க்கு கருவூலத்தில் இருந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் .

குறிப்பு : உங்களின் கைபேசி எண் மற்றும் MAIL ID க்கு தகவல் வரவில்லை எனில் உங்களின் கைபேசி எண் மற்றும் MAIL ID இன்னும் IFHRMS இல் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் . IFHRMS இல் உங்கள் கைபேசி எண் மற்றும் MAIL ID ஐ இணைக்க உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு பட்டியல் தயார் செய்பவரிடம் தகவல் தெரிவிப்பதாலையோ அல்லது உங்கள் உயர் அதிகாரி ( DDO ) இடம் பரிந்துரை கடிதம் கொடுப்பதன் மூலம் நீங்கள் இணைக்கலாம் .

மாத ஊதிய பட்டியல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம் 

நிலை 1 

ஏதேனும் ஒரு BROWSER இல் https://www.karuvoolam.tn.gov.in/ என்று TYPE செய்து SEARCH செய்யவும் . 

நிலை 2

தற்போது உங்களுக்கு கருவூலம் முகப்பு பக்கம் தோன்றும் . அதில் உள்ள உள்நுழை (SIGN OR  LOGIN ) என்ற OPTION ஐ click செய்யவும் .

நிலை 3

தற்போது தோன்றும் பக்கத்தில் EMPLOYEE என்ற OPTION தேர்வாகி இருக்கும் . அதற்கு கீழே பணியாளர் எண் மற்றும் கடவுச்சொல் கேட்கப்பட்டு இருக்கும் அதில் உங்களின் 11 இலக்க IFHRMS எண் மற்றும் உங்களின் கடவுச்சொல்லை கொடுத்து SIGN IN கொடுக்கவும் .

நிலை 4

பிறகு தற்போது வரும் பக்கத்தில் REPORT என்ற OPTION ஐ தேர்வு செய்யவும் .



நிலை 5

தற்போது உங்களுக்கு உங்கள் ஊதிய பட்டியலை தேர்வு செய்வதற்கான OPTION தோன்றும் . அதில் உங்களுக்கு எந்த மாதத்திற்கு ஊதிய பட்டியல் தேவையோ அந்த மாதம் மற்றும் வருடத்தை தேர்வு செய்துவிட்டு . GO வை CLICK செய்யவும் . 

நிலை 6

 இறுதியாக இப்போது உங்கள் ஊதிய பட்டியல் பதிவிறக்கம் ஆகும் . இதை உங்களால் கைபேசியிலே மேற்கொள்ள முடியும் . பதிவிறக்கம் ஆன ஊதிய பட்டியலை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும் . PASSWORD உங்கள் DATE OF BIRTH ஆகும் . PASSWORD 8 இலக்கத்தில் எண்களை மட்டும் உள்ளிடவும் உதாரணமாக  01011999


ஊதிய பட்டியல் பதிவிறக்கம் செய்யும் முறை pdf வடிவில் click here 


கருத்துரையிடுக

0 கருத்துகள்