TRB ANNUAL PLANNER 2023 RELISED
ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது . இத்தேர்வு அட்டவணை மொத்தம் 15149 காலிப்பணியிடங்களுடன் வெளிவந்துள்ளது .
சென்ற 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த தேர்வு கால அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4989 ( 3902 இ.நி.ஆ + 1087 ப.ஆ ) காலிப்பணியிடங்கள் அடங்கிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு மே 2022 இல் தேர்வு வெளியிடப்பட்டு ஜூன் 2022 இல் தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு இந்நாள் வரை அறிவிக்கப்படவில்லை .
ஆனால் தற்போது வந்துள்ள தேர்வு கால அட்டவணையில் அதிகபட்சமாக 10140 ( 6553 இ.நி.ஆ + 3587 ப.ஆ ) காலிப்பணியிடங்களுடன் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . அவற்றில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் சேர்த்து மொத்தம் 10140 ஆகும் .
அதற்கு அடுத்தப்படியாக 4000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுடன் உதவி பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் & கல்லூரிகள் கல்வி தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மேலும் 2022 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் 2023 ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் - 2023 இல் தேர்வு அறிவிக்கப்பட்டு மார்ச் 2024 இல் தேர்வு நடைபெறும் என்று வெளியிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் பொருத்தவரை 267 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் பல தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படும் நாள் , மொத்த காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு தேதியுடன் TRB ANNUAL PLANNER 2023 வெளிவந்துள்ளது .
TRB ANNUAL PLANNER 2023 பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.